
பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. பொதுவாக சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகள் அதிக குறும்புத்தனம் மிக்கவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.
ஆனால், அவர்களிலும் ஒரு பிரிவினர் சிறிது கவனக்குறைவாக இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து லண்டன் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
அதன்படி, சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளில் ஒரு பிரிவினர் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே குறும்புத்தனம் செய்கின்றனர்.
இதனால், எவ்வித பாதிப்பும் அந்த குழந்தைகளுக்கு ஏற்படப்போவதில்லை. என்றாலும், இதில் ஒரு பிரிவினர் எதிலும் ஆர்வம் இல்லாத குழந்தைகளாக உள்ளனர்.இவர்களால், விளையாட்டு, படிப்பு போன்றவற்றில் மற்ற குழந்தைகள் போன்று ஆர்வம் காட்ட முடிவதில்லை.
லண்டனிலுள்ள ஒரு பள்ளியில், மொத்தம் 52 குழந்தைகளிடம் மனநல மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். இவர்களில் 14 பேர் மிகவும் குறும்புத்தனமாக காணப்பட்டனர். இதில், 6 குழந்தைகள் எதிலும் போதிய கவனம் இல்லாத குழந்தைகளாக இருந்தனர்.
இதுபோன்ற குழந்தைகளை கண்டறிந்து, ஆரம்பத்திலேயே முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களது குறைபாடுகளை சரிசெய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயத்தில் பெற்றோரும் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment