Sunday, July 6, 2008

காதலில் ஜெயிக்க பற்களை பராமரியுங்கள்!


காதலில் தோல்வியடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், பற்களை பராமரிக்காத பலரது காதல் பாதியிலேயே 'பணால்' ஆகியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கும் பிரபல 'ஓரல்-பி' நிறுவனம் சமீபத்தில் பல் பராமரிப்பு முறை குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டது.

மொத்தம் 1001 நபர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், பற்களை முறையாக பராமரிக்காத காதலன்/ காதலியுடன் முத்தத்தை பகிர்ந்து கொள்ள முடியாது என்று 96 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக, முத்தம் கொடுப்பதையே நிறுத்திவிட்டதாக 61 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.பற்களை முறையாக பராமரிக்காத ஆண்களை 70 சதவீதம் பெண்கள் வெறுத்து ஒதுக்கிவிடுகின்றனர்.

ஆண்களில் 54 சதவீதம் பேர், பற்களை பராமரிக்காத பெண்களை கண்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். பராமரிக்கப்படாத பற்கள், ஒருவரது காதல் வாழ்க்கையை மட்டுமல்ல;

அவரது வேலை வாய்ப்பையும் பாதிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

0 comments: