Saturday, July 5, 2008

ஸ்பெஷல் மட்டன் மசாலா

தேவையானப் பொருட்கள்

மட்டன் -- 1/2 கிலோ
தக்காளி -- 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது -- 1 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
மல்லிபொடி -- 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -- 2 சிட்டிகை
கறிமசாலா -- 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் -- 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

செய்முறை

மட்டனை சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.

வாணலியில் நெய்யை விட்டு வெங்காயத்தை போட்டு தாளித்து பொன்நிறத்தில் வரும் வரை வதக்கி இஞ்சி,பூண்டு விழுது போட்டு அதனுடன் மட்டனையும் சேர்க்கவும்.

மட்டன் ஓரளவு வெந்ததும் கறிமசாலாவைத்தவிர மீதியை அரைக்கவும்.
வெந்து கொண்டிருக்கும் கறியில் அரைத்த மசாலாவைப் போட்டு கிளறி மூடி வைத்து வேகவிடவேண்டும்.

வெந்து வரும் போது கறிமசால் பொடி, தக்காளி சேர்த்து கிளறி விட்ட எண்ணைய் மேலெ வரும் போது இறக்கி பறிமாறலாம்.
சுவையான ஸ்பெஷல் மட்டன் மசாலா ரெடி.

0 comments: