குளிர் காலங்களில் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்
தேவையானப் பொருட்கள்
மட்டன் - அரை கிலோ
காஞ்ச மிளகாய் - முன்று
பூண்டு - ஒரு முழு பூண்டு
மிளகு தூள் - ஒரு மேசை கரண்டி
சீரகதூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணை - ஐந்து தேக்கரண்டி
வெங்காயம் - நான்கு
கருவேப்பிலை - ஐந்து ஆர்க்
செய்முறை
எண்ணையை காய வைத்து அதில் காஞ்ச மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பிறகு பூண்டை பொடியாகா அரிந்து போட்டு வதக்கி கறியை சேர்த்து கிளறி உப்பும் சேர்த்து தீயை சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும்.
கடைசியில் மிளகு சீரக தூள் தூவி மீண்டும் கிளறி ஐந்து நிமிடம் தீயை சிம்மில் வைத்து இரக்க வேண்டும்.
குறிப்பு:இது ஒரு வகை மிளகு கறி. வெரும் பருப்புக்கு சூப்பராக இருக்கும்
Saturday, July 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment