Sunday, July 13, 2008

மாங்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:
இனிப்புள்ள மாங்காய் - 2,
வெல்லம் - 2 கப்,
பச்சை மிளகாய் - 4,
கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

மாங்காயை தோல் சீவி சிறிய துண்டங்களாக்கவும் குக்கரில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள மாங்காய்த் துண்டங்களைப் போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி வைத்து விடவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி அதனுடன் வெல்லத்தையும் போட்டு, மசித்த மாங்காயையும் போட்டு தேவையான உப்புப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை கொத்தமல்லி தாளிக்கவும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பச்சடி இது!

0 comments: