Sunday, July 13, 2008

மாங்காய் மோர்க் கூட்டு

தேவையான பொருட்கள்:
இனிப்புள்ள மாங்காய் (கிளி மூக்கு மாங்காய்) - 1,
காரட் பெரியது - 1,
பீன்ஸ்- 50 கிராம்.
உருளைக் கிழங்கு (பெரியது) - 1,
தேங்காய் - ஒரு மூடி,
பச்சை மிளகாய் - 6,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கெட்டித் தயிர் - ஒரு கப்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தாளிக்க,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - கொஞ்சம்.

செய்முறை :

தேங்காயைத் துருவி சீரகம், பச்சைமிளகாயுடன் விழுதாக அரைத்துக் கொள்ளவும். மாங்காய், காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும், கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, சிரகம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தலா 1 டீஸ்பூன் போட்டு கொஞ்சம் பெருங்காயத் தூள் போட்டுத் தாளித்து எடுத்து வைத்துக் கொண்டு; அதே வாணலியில் காய்கறிகளைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். காய்கறிகளைப் பொடியாக நறுக்குவதால் சீக்கிரம் வெந்து விடும். கலரும் மாறாது.

காய்கறிகள் வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு நன்கு கெட்டியான தயிரை உடன் ஊற்றி, உப்பைப் போட்டு இறக்கி விடவும். ஏற்கெனவே தாளித்து வைத்ததை எடுத்துப் போட்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலையை அதனுடன் போட்டு மேலே ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கலந்து பரிமாறவும். கமகம வாசனையுடன் சுவையாய் இருக்கும் இந்த மோர்க் கூட்டு.

0 comments: