Friday, July 11, 2008

காளிபிளவர் பஜ்ஜி

தேவையானப் பொருட்கள்

காளிபிளவர் =1
கடலை மாவு =100கி
பச்சரிசி மாவு =1தேக்கரண்டி
மிளகாய் பொடி =1டிஸ்பூன்
ம.பொடி =1/4டீஸ்பூன்
பெருங்காயப்பொடி =1/4டீஸ்பூன்
எண்ணை =200கி
உப்பு =தேவையானது

செய்முறை

காளிபிளவரை சிறிது காம்போடு எடுத்து வெந்நீரில் உப்பு போட்டு கழுவவும்.
பிறகு சிறிது தண்ணீர் விட்டு வேகவிட்டு தண்ணீரை வடிக்கவும்.

உப்பு, மிளகாய்பொடி, ம.பொடி, பெருங்காயம், கடலைமாவு, அரிசி மாவு ஆகியவற்றை தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பக்குவத்திற்கு கரைக்கவும்.

கடாயில் எண்ணை விட்டு கரைத்த மாவில் காளிபிளவரை முக்கி எண்ணையில் பொரிக்கவும்.

0 comments: