Friday, July 11, 2008

வற்றல் குழம்பு[2]

தேவையானப் பொருட்கள்


மாவற்றல்[அ]கத்தரி வற்றல் =5
கொத்தவரை வற்றல் =6
வத்தக்குழம்பு பொடி =3தேக்கரண்டி
ம.பொடி =1/4ஸ்பூன்
புளி =எலுமிச்சையளவு
எண்ணை =3தேக்கரண்டி
உப்பு =தேவையானது
சின்ன வெங்காயம் =10
பூண்டு =5பல்[இருந்தால்]
பெருங்காயப்பொடி =1/4ஸ்பூன்
கடுகு, உளுந்து =1ஸ்பூன்
வெந்தயம் =1/2ஸ்பூன்


செய்முறை


1கிளாஸ் அளவு வெந்நீரில் வற்றலை ஊறவைத்து பிழிந்து எடுக்கவும். புளியை 2கிளாஸ் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணை விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம், வெந்தயம் தாளித்து முழு வெங்காயம் பூண்டு போட்டு வதக்கி வற்றல் குழம்பு பொடி, ம.பொடி, உப்பு போட்டு சிறுதீயில் வதக்கவும். புளியை ஊற்றி வற்றலை போடவும். கொதித்து குழம்பு வற்றி எண்ணை மிதந்தவுடன் இறக்கவும்.


குறிப்பு:



வற்றல் குழம்பு பொடி தயாரிக்க கொஞ்சமாக எல்லவற்றையும் எடுத்து மிக்ஸியிலும் அரைத்து வைத்து கொள்ளலாம். இதே பக்குவத்தில் முருங்கைக்காய், கத்தரி, வதக்கிய வெண்டைக்காய், பரங்கிக்காய், வேகவைத்த பிடி கருணைக்கிழங்கு, ஆகியவற்றை எண்ணையில்வதக்கும்போது நன்கு வதக்கி பிறகுபொடி சேர்த்து வைக்கலாம்.

0 comments: