Friday, July 11, 2008

வத்தல் குழம்பு[செட்டிநாட்டு காரக்குழம்பு]

தேவையானப் பொருட்கள்

மணத்தக்காளி வற்றல்[மிளகுதக்காளி வற்றல்]=2தேக்கரண்டி
புளி =எலுமிச்சையளவு
மிளகாய் பொடி =1தேக்கரண்டி
தனியா பொடி =1தேக்கரண்டி
சோம்பு, சீரகத்தூள் =1/2ஸ்பூன்
உப்பு =தேவையானது
எண்ணை =3தேக்கரண்டி
சின்ன வெங்காயம் =10
பூண்டு =10பல்
தக்காளி =2
கருவேப்பிலை[இருந்தால்] =1கைப்பிடி
கடுகு, உளுந்து =1ஸ்பூன்
வெந்தயம் =1/2ஸ்பூன்
பெருங்காயப்பொடி =1/4ஸ்பூன்

செய்முறை

புளியை ஊறவைத்து 2கிளாஸ் கரைக்கவேண்டும்.

கடாயில் எண்ணை விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளித்து மிளகு தக்காளி வற்றலை போட்டு பொரிந்தவுடன் உரித்த முழு வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வதக்கவும். மிளகாய்பொடி, தனியாபொடி, சோம்பு, சீரகப்பொடி போட்டு சிறுதியில் 5நிமிடம் வதக்கவும். புளித்தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும். கொதித்து எண்ணை மிதந்தவுடன் இறக்கவும்.

0 comments: