குழந்தை இல்லாமல், மூன்று வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் சண்முகத்திற்கும் அவன் மனைவிக்கும் முழு சந்தோஷம் இல்லை.
குழந்தை சராசரிக்கும் மிகக் குறைவான எடையில் இருந்தது. டாக்டரும் அதற்குரிய சிகிச்சை அளித்தும், ஆறுதல்கள் கூறினாலும் சண்முகத்திற்கு சமாதானம் ஆகவில்லை. குழந்தை எப்பொழுது நல்ல நிலைக்கு வரும் என்ற கவலை அவனை வாட்டி எடுத்தது.
ஒரு வாரமா வேலைக்குக் போகாமல் இதோ இன்னிக்குத்தான் போறான். விறுவிறுவென வேலையைப் பார்த்தான். கடைசியாய் அந்தப் பெரியவர் நின்றிருந்தார்.
அவரிடமிருந்து கூப்பனை வாங்கி குறித்தவன், அரிசியை நிறுத்து அவரது சாக்குப் பையில் கொட்டினான்.
``அட! என்னப்பா இது..? எப்பவுமே எடைகுறைச்சலாத்தான் நிறுத்துக்கொடுப்ப. இன்னிக்கு கரெக்டா கொடுக்கிற,,, குழந்தை பொறந்த சந்தோஷமா...? நீ நல்லாயிருப்பா..'' என்றார் அந்தப் பெரியவர்.
Tuesday, July 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment