
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -ஒரு கப்,
முளைகட்டிய பயிறுகள் (எல்லாம் சேர்த்து) - 1/2 கப்,
வெங்காயம்,
பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்,
மிளகுத் தூள் -1/2 டீஸ்பூன்,
சோயா- சிறிதளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கரைத்து தோசைக-ளாக வார்த்துக் கொள்ளவும். சோயா உருண்டைகளை கொதிநீரில் வேக வைத்து குளிர்ந்த நீரில் அலசிப் பிழிந்து அதை துருவி வைக்கவும். முளைகட்டிய பயிறுகளுடன் வெங்காயம், பூண்டு விழுது, மிளகுத் தூள், சோயா துருவல், உப்பு சேர்த்து வதக்கி அதை தோசை உள்ளே ஸ்டப்ஃபிங் ஆகப் பரத்தி சாப்பிடவும்
0 comments:
Post a Comment