தேவையானப் பொருட்கள்
ரவை - அரை கிலோ
உளுந்து - அரை கப்
தாளிக்க
--------
நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு
உளுத்தம் பருப்பு - அரை தெக்கரண்டி
கருவேப்பிலை - கொஞ்சம்
முந்திரி பருப்பு - ஐந்து
தயிர் - ஒரு கப்
நெய் - கொஞ்சம் (தேவையானது)
கேரட் துருவல் - கால் கப்
இட்லி சோடா - ஒரு பின்ச்
செய்முறை
உளுநதை அரை மணிநேரம் ஊறவைத்து அரைக்கவும்.
ரவையில், தயிர் ,உப்பு ,இட்லி சோடா சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.
முந்திரியை பொடியாக அரியவும்.
நெயில் கடுகு ,உளுந்து,கருவேப்பிலை தாளித்து முந்திரியை சேர்த்து வதக்கி ரவைகலவையில் கொட்டவும்.
அரைத்த உளுந்தையையும் சேர்க்கவும்.
அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
இப்போது இட்லிகளாக இட்லி சட்டியில் நெய் தடவி ஊற்றி மேலே ஒவ்வொரு இட்லியின் மேல் கேரட் துருவல் ஒரு தேக்கரண்டி அளவு வைத்து இட்லிகளாக வார்க்கவும்.
கொத்துமல்லி துவையலுடன் சாப்பிடவும்.
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment