Wednesday, July 16, 2008

எக் நூடுல்ஸ்

தேவையானப் பொருட்கள்
நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்
முட்டை - ஒன்று
வெங்காயம் - இரண்டு
இஞ்சி புண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
பச்ச மிளகாய் - ஒன்று
உப்பு - கால் தேக்கரண்டி
மிளகாய் தூல் - கால் தேக்கரன்டி
கொத்து மல்லி தழை - கொஞ்சம்
பட்டரும் எண்ணையும் சேர்ந்த கலவை - இரண்டு தேக்கரண்டி

செய்முறை

நூடுல்ஸை நொருக்கி இரண்டு கப் தன்னீரில் கொதிக்கவைத்து இரண்டு நிமிடத்தில் இரக்கி வடிகட்டி குளிர்ந்த தண்ணீரில் அலசி ஒரு தேக்கரண்டி எண்ணி சேர்ர்த்து பிசறிவைக்கவும். அப்போது தான் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.
பட்டர், எண்ணையை காயவைத்து வெங்காயம், பச்சமிளகாயை பொடியாக அரிந்து போட்டு வத்க்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும், வதக்கி முட்டையை நல்ல அடித்து வதக்கி, நூடுல்ஸை போட்டு கிளறி கொத்து மல்லி தழை தூவி இரக்கி பரிமாரவும்.

0 comments: