Wednesday, July 16, 2008

அவள்

அரவிந்தன் வாழ்க்கை வெறுத்துப் போனான். வீட்டில் எப்போதும் தாரிணியுடன் சண்டை. காதலித்து மணந்த பெண்தான். இப்போது புரிந்துகொள்ளாமல் எதிர்க்கிறாள். இருவரும் மென்பொருள்துறையில் ஒரே நிறுவனத்தில்தான் பணிபுரிகிறார்கள்.

போதும், பிரிந்துவிடலாம் என்று கூட யோசித்திருக்கிறான். கணினி திரையில் சர்க்குலர் வந்தது. மனவளம் பேணுவதற்காக ஒருநாள் பயிற்சி முகாம் பிச்சாவரத்தில் என்றிருந்தது.

பயிற்சியளிக்க வந்தவர் ஒரு சாமியார்.

கலகலப்பாகப் பேசினார். திடீரென பேச்சை நிறுத்திவிட்டுப் போய்விட்டார்.

அவனது துறை மேலாளர் சாமியாரை அழைத்து வந்தபோது சொன்னார் மைக்கில்.

``உங்களது அருகில் உள்ளவர்களோடு உளமார பேசுங்கள். பேசுபவன்தான் மனிதன். ஆனால், இப்போது பேசாமடந்தையாகிக் கொண்டு வருவதால்தான் வீட்டிலும் வெளியிலும் பிரச்னைகள். இதுதான் இன்றைக்குப் பயிற்சி'' தாரிணியைப் பார்த்தான். அவள் கண்கள் அவனுடன் பேசத் துவங்கிவிட்டன..

0 comments: