Sunday, July 20, 2008

ஆலு டொமேட்டோ சப்ஜி

தேவையானப் பொருட்கள்
உருளைகிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு/உளுந்து - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை/மல்லி இலை - சிறிதளவு

செய்முறை
உருளைகிழங்கை மிக பொடியாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பூண்டை தட்டி வைக்கவும்.
வணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு/உளுந்து தாளித்து,வெங்காயம்,நறிக்கிய உருளைகிழங்கு,பச்சைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கி, எல்லாத் தூளையும் சேர்த்து உப்பு 1/2 கப் நீர் சேர்த்து 7கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் கீறி வைத்துள்ள முட்டையையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் கருவேப்பிலை,மல்லி இலை சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.


குறிப்பு:
இது சப்பாத்தி,பூரி,இட்லி,தோசை என எல்லாவற்றிற்கும் பொருந்தும்.சுவையாகவும் மிக எளிதில் செய்யக் கூடியதாகவும் இருக்கும்.
வழங்கியவர்

0 comments: