
தேவையானப் பொருட்கள்
சிறிய உருளைக்கிழங்கு - அரைக் கிலோ
காலிஃபிளவர் - ஒன்று
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - கால் லிட்டர்
கொத்தமல்லித்தழை - சிறிய கட்டு
மிளகாய்த்தூள் - ஒன்றரைத் தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாப்பொடி - அரைத்தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
முந்திரிப்பருப்பு - 10
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 4
செய்முறை
பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி, பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து கரகரப்பாய் அரைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து தனியே வைக்கவும்.
காலிஃபிளவரை பெரியத் துண்டங்களாக நறுக்கி, நன்கு கழுவி பின் சூடான தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு வைத்து வடிகட்டவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காலிஃபிளவரையும், உருளைக்கிழங்கினையும் தனித்தனியேப் பொரித்து எடுக்கவும்.
ஒரு அகலமான வாணலியில் வெண்ணெயை விட்டு உருகியதும், அரைத்த விழுதினைச் சேர்த்து மிதமான தணலில் கலந்து விடவும்.
சிறிதளவு எண்ணெய்ச் சேர்த்து சீராக கலந்து விடவும்.
மசாலா கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது, தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், மிளகாய்ப்பொடி சேர்க்கவும்.
ஒரு நிமிடம் கழித்து தேவைகேற்ப உப்பையும், தண்ணீரையும் சேர்க்கவும்.
கலவை நன்றாக கொதித்ததும், பொரித்த உருளைக்கிழங்கினைச் சேர்க்கவும்.
மேலும் ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லித்தழையினைத் தூவி இறக்கவும்.
0 comments:
Post a Comment