
தேவையானப் பொருட்கள்
பெரிய காலிஃபிளவர் - 1
கடுகு எண்ணெய் - 125 கிராம்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
மிளகாய்த் தூள் - அரைத் தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 4
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரைத் தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி
சுக்கு - ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லி - ஒரு கட்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
காலிஃபிளவரை கொத்துக் கொத்தாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் சீரகம், பெருங்காயம், அரைத்த இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் அனைத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு வதக்கவும்.
அதன்பிறகு, காலிஃபிளவர், உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, சர்க்கரை சேர்த்து சிறிய தீயில் வேகவிடவும்.
காய் நன்கு வெந்தபிறகு தனியாத் தூளைத் தூவி மேலும் சிறிது நேரம் வைத்திருந்து, இறக்குவதற்கு முன்பு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
0 comments:
Post a Comment