தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பு புற்றுநோய் வராது என்பது ஆய்வு மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தாய்ப்பால் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்துள்ளது.
சமீபத்தில் இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இதில், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு புற்றுநோய் ஆபத்து குறைவு என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் லூசிகாலஸ் என்பவர் கூறுகையில், "பெரும்பாலான பெண்கள் மார்பு புற்றுநோயிலிருந்து தங்களை தாங்களே காத்துக்கொள்ளும் இந்த எளிய பாதுகாப்பு முறை பற்றி அறியாமலேயே உள்ளனர்" என்றார்.
"குழந்தை பெற்ற தாய்மார்கள், குறைந்தது 6 மாத காலத்துக்காவது தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பொருத்து தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பது குறித்து முடிவு செய்யலாம். இதன் மூலம், குழந்தைகள் அதிக குண்டாவதையும் தடுக்கலாம்.
இதுதவிர, குழந்தைகளும் பல்வேறு நோய்களில் சிக்காமல் தப்புவர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய ஆய்வுபடி, மொத்தம் 1998 தாய்மார்களிடம் தாய்ப்பால் குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டன.
Thursday, July 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment