Thursday, July 3, 2008

வயது கூடினாலும் இளமை காக்க சில குறிப்புகள்!

வயது கூடிக்கொண்டே இருக்க, தேகமும் முதிர்ச்சியடையும் என்பதை மறுக்க முடியாது. ஆயினும் சில வழிமுறைகளைப் பின்பற்றினால், முகச் சுருக்கங்கள் இன்றியும், வனப்பான தோலுடன் இளமை காக்கலாம். அதற்குச் செய்ய வேண்டியவை:

* குடிப்பழக்கம் கூடாது. இப்பழக்கம் இருப்பின், குறைவாக அருந்துவதே நல்லது.
* புகைப் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
* தானியங்கள், பழங்கள், காய்கறிகளை அன்றாட உணவில் அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
* கொழுப்பு நிறைந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
* வைட்டமின் சி நிறைந்த உணவை மிகுதியாக உட்கொள்ளலாம்.
* மன அழுத்தத்திற்கு இடம் தரக்கூடாது.
* உடற்பயிற்சியை வழக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
* போதுமான ஓய்வு அவசியம்.
* அதிக அளவில் தண்ணீர் பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.

0 comments: