Tuesday, July 1, 2008

இதய ஆரோக்கியத்துக்கு உதவும் பழச்சாறுகள்!

ஆப்பிள், சிவந்த திராட்சை உள்ளிட்ட பழங்களின் சாறானது, இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் தமனியில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து, இதய ஆரோக்கியத்துக்கு வழிவகை செய்கிறது.

இதனை, லண்டனிலுள்ள மோன்ட்பெல்லியர் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் தங்களது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

தமனியில் அடைப்பு, கட்டி உள்ளிட்ட பாதிப்புகள் உண்டாவதைத் தடுத்து, மாரடைப்பு போன்ற இதய கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை, ஆப்பிள் மற்றும் சிவந்த திராட்சைப் பழச்சாறுக்கு உண்டு என்று அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், இப்பழங்களில் உள்ள வைட்டமின் சி, கரோடெனாய்டு போன்ற ஆன்டியாக்சைடுகள், ஆரோக்கியத்துக்கு மிகுந்த பலனை அளிக்கின்றன

0 comments: