
வறண்டநுனி பிளவுபட்ட முடியுள்ளவர்களுக்கு
கிளிஸரின் - ஒரு டீஸ்பூன்,
ஆலிவ் ஆயில் - ஒரு டீஸ்பூன்,
ப்ரௌன் வினிகர் - ஒரு டீஸ்பூன்,
விளக்கெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
ஷாம்பூ - ஒரு டீஸ்பூன்.
ஷாம்பூவைத் தவிர மற்றவற்றை நன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு, தலைமுடியின் வேர்ப்பகுதிகளில் நன்கு படும்படி தடவிவிட்டு, அரைமணி கழித்து இப்படி அலசவும்.
இந்த முறையை பத்து நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால் முடியின் வறட்சியும் தலையின் நமநமப்புத் தன்மையும் குறைந்து முடி பளபளக்கும்.
பிசுபிசுப்பானகூந்தல்உடையவர்களுக்கு...
மஞ்சள் கரு, வெள்ளைக் கரு - ஒரு முட்டை அளவு,
துண்டுகளாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று,
ரோஸ்வாட்டர் - ஒரு கப்,
பாட்சோலி எஸன்ஷியல் ஆயில் (பெரிய கடைகளில் கிடைக்கும்) - இரண்டு சொட்டுக்கள்,
பிரியாணி மசாலா இலை - ஒன்று
வெங்காயம், பிரியாணி மசாலா இலை, செம்பருத்தி இலை மூன்றையும் மிக்ஸியில் அடித்து வடிகட்டி சாறாக எடுத்துக் கொண்டு, முட்டை மஞ்சள் கரு, வெள்ளைக்கரு, பாட்சோலி ஆயில் ரோஸ்வாட்டர் இவைகளைக் கலந்து பேஸ்ட்டாக்கி தலையில் தடவி ஊறவைக்கவும்.
அதன்பின் மஸாஜ் செய்யவும். இரண்டு மணி நேரம் கழித்து, ஷாம்பூவினால் நன்றாக அலசவும்.
வாரத்திற்கொருமுறை மேற்கண்ட முறையைக் கடைப்பிடித்து வர `பிசுபிசுப்பு ப்ரியா' கூட `பளபளப்பு ப்ரியா' ஆகிவிடுவாள்.
0 comments:
Post a Comment