
*வேப்பிலை கலந்த க்ரீம்கள், லோஷன்கள் சருமத்தில் தங்கும் நுண்ணிய கிருமிகளைத் தாக்கும் கிருமிநாசினியாக செயல்படுகின்றன.
*சந்தனம் கலந்தவை சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் பாதுகாக்கின்றன.சருமத்தின் லூஸான தன்மையைக் குறைத்து இறுக்கமாக்கி நல்ல நிறத்தையும் ஏற்படுத்த உதவும்.
*முல்தானி மிட்டி, சருமத்தின், அதிகப்படி எண்ணெய்ப் பிசுபிசுப்பை உறிஞ்சி எடுத்து விடுகிறது. சருமத்துளைகளில் உள்ள நுட்பமான அழுக்கையும் சுத்தம் செய்துவிடுகிறது.
*ரோஜா கலந்தவை.சருமத்திற்கு புத்துணர்வைக் கொடுத்து, புதுப்பொலிவைத் தருகிறது.
*ஆரஞ்சு கலந்த ஃபீல் மாஸ்க், லூஸான சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது!
*எலுமிச்சை,புதினா கலந்த லோஷன்கள் சருமத்திலுள்ள வடுக்களையும் கறுப்பு நிற திட்டுக்களையும் கம்ப்ளீட்டாக நீக்கிவிடும்.
*சோற்றுக்கற்றாழை கலந்த லோஷன் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதோடு, குழந்தையின் சருமம்போல் மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது!
0 comments:
Post a Comment