
தேவையானப் பொருட்கள்
வாழைப்பூ - ஒன்று
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3
பச்சரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3

பச்சரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாழைப்பூவை மேல் தோலை நீக்கி விட்டு அதில் உள்ள சிறு சிறு பூக்களை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பூவின் நடுவில் இருக்கும் நரம்பையும், அதனுடன் உள்ள ஜவ்வையும் மட்டும் தனியாக எடுத்து விடவும்.
அதன் பின்னர் பூக்களை பொடியாக நறுக்கி அதனை மோர் கலந்த தண்ணீரில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். மோர் கலந்த தண்ணீரில் ஊற வைப்பதால் வாழைப்பூ கருக்காமல் இருக்கும்.
அரை மணி கழித்து மோர் கலந்த தண்ணீரிலிருந்து பிழிந்து எடுத்து விடவும். வாணலியில் மோரில் ஊற வைத்த வாழைப்பூவை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
வெந்ததும் எடுத்து வடிகட்டி ஆற வைத்து பிறகு மிக்ஸியில் போட்டு ஒரு முறை மட்டும் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதைப் போல் அரைத்து சேர்ப்பதால் சக்கையாக இல்லாமல் வடை போட ஏதுவாக இருக்கும். நறுக்கினவற்றை எல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், பச்சரிசிமாவு, கடலைமாவு, உப்பு, வேகவைத்து அரைத்த வாழைப்பூவை சேர்த்து பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து உருண்டையாகவோ அல்லது தட்டையாகவோ செய்து போடவும்.
எண்ணெயில் போட்டு 2 நிமிடம் கழித்து திருப்பி விட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.
0 comments:
Post a Comment