Saturday, July 12, 2008

பொடி ரைஸ்''

தேவையான பொருட்கள் :

எள்ளு, கொள்ளு, துவரம் பருப்பு - தலா 25 கிராம்,
மிளகு - ஒரு ஸ்பூன்,
நெய் - 4 ஸ்பூன்,
பாசுமதி அரிசி - 200 கிராம்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

பாசுமதி அரிசியை ஒரு மடங்குக்கு இரு மடங்கு தண்ணீர் விட்டு ஊற விசில் விட்டு இறக்கவும். எள்ளு, கொள்ளு, துவரம் பருப்பு, மிளகை வெறும் வானாலியில் தனித் தனியாக வறுக்கவும். ஆறிய உடன் மிக்ஸியில் பொடித்து, சாதத்துடன் சேர்க்கவும் அத்துடன் நெய், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுக்கவும்.

கமகம வாசனையுடன்இருக்கும் இதை நிமிஜத்தில் தயார் செய்து விடலாம். சிப்ஸ் இருந்தால் சாப்பாடு கடகடவென உள்ளே இறங்கி விடும்.

0 comments: