Saturday, July 12, 2008

பருப்பு அடை''

தேவையான பொருட்கள் :

அரிசி - 250 கிராம்,
பாசிப் பருப்பு, துவரம் பருப்பு - 25 கிராம்,
சோயா - ஒரு கப்,
உளுத்தம் பருப்பு - 4 ஸ்பூன்,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
தோல் உரித்தது - 4 பல்,
மிளகு - ஒரு ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 25 மி.லி.,
வெங்காயம் நறுக்கியது - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை :

புழுங்கல் அரிசியை தனியாக ஊற வைக்கவும். பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, சோயாவை ஊற வைத்து ஊற வைத்து இஞ்சி, பூண்டு மிளகு சேர்த்து கெட்டியாக கரகரப்பாக கரைக்கவும். அரிசியை தனியாக அரைத்து எல்லா மாவையும் ஒன்று சேர்த்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை பொடியாக நறுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து கலந்து அடைக்கல்லில் அடை தட்டி இரு புறமும் எண்ணெய் விட்டு வேக விட்டு எடுக்கவும்.

குழந்தைகள் வெல்லம் வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம். பெரியவர்கள் மிளகாய்ப் பொடி, அவியல் வைத்தும் சாப்பிடலாம்

0 comments: