தேவையான பொருட்கள்:
இனிப்புள்ள மாங்காய் (பெரியது) - 1,
காரட் துருவல், தேங்காய்த் துருவல் - தலா 1 கப்,
வற்றல் மிளகாய் -8,
பாஸ்மதி அரிசி - 2 கப்,
கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, புதினா, மல்லி இலைகளை நன்கு அலம்பி பொடியாக நறுக்கியது - ஊறுகாய் விருப்பத்திற்கேற்ப வைக்கவும்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
பாஸ்மதி அரிசியை உதிர் உதிராக சாதம் வடித்துக் கொள்ளவும், சாதத்தின் மேல் 2 டீஸ்பூன் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் பரவலாக ஊற்றி வைக்கவும். சாதம் இன்னும் வாசனையாக இருக்கும். வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், பெருங்காயம், வற மிளகாய், மஞ்சள்ப் போட்டு வறுபட்டவுடன், மாங்காயைத் துருவி சேர்க்கவும். பின் தேங்காயைச் சேர்க்கவும். பின்பு துருவிய காரெட்டைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு நன்கு கலக்கவும். பின்பு வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு சாதம் உடையாமல் நன்கு கிளறவும். கடைசியில் நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை, புதினா, மல்லி இலைகளை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும். இது மிகவும் சுவையாக இருக்கும். பிரயாணம் செல்பவர்கள் எடுத்துச் செல்லலாம். செய்வதும் எளிது.
Sunday, July 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment