Friday, July 4, 2008

சொரியாஸிஸ் பற்றி தெரியுமா?

இதனால்தான் வருகின்றது என்று தெளிவான காரணம் கண்டறியப்படாத நோய் இது. நவீன மருத்துவத்தைப் பொறுத்த மட்டில், மூலக்காரணம் கண்டறியப்பட்டால்தான் முற்றிலும் குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். இந்த நோய்க்கு இதுவரை முற்றிலும் குணப்படுத்தும் மருந்துகள் கண்டறியப்படவில்லை.

உடல் எதிர்ப்பு சக்தி அமைப்பில் உண்டாகும் கோளாறு காரணமாக, செல்களின் வளர்ச்சி அமைப்பில் மாற்றங்கள் உண்டாகி, செல்கள் அபரிமித வளர்ச்சியடைவதின் விளைவுதான் சொரியாஸிஸ் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள காரணம். எதிர்ப்பு சக்தி அமைப்பில் உண்டாகும் கோளாறுக்கு, பரம்பரை, மன அழுத்தம், ஒவ்வாத மருந்துகள் என்ற பல காரணங்களில் ஏதேனுமொன்று காரணமாக இருக்கலாம்.

நோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்துகள் நவீன மருத்துவத்தில் இல்லையென்றாலும், நோயை கட்டுப்படுத்தும் மருந்துகள் தற்போது இருக்கின்றது.சொரியாஸிஸ் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், அதில் நிறைய வகைகள் இருக்கின்றன.

அவற்றின் வகையைப் பொறுத்து, பரவி இருக்கும் நிலையைப் பொறுத்து, சிகிச்சை, மருத்துவம் எல்லாம் வித்தியாசப்படும். ஆகவே, இந்த விசயத்தில் மற்றவர்களின் கருத்துக்களை கேட்டு, அவர்கள் மேற்கொண்ட சிகிச்சையை எடுத்துக்கொள்வதில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உங்கள் கணவருக்கு இருப்பது என்ன வகை, என்ன நிலை என்பதை தெரிந்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டீர்கள் என்றால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

0 comments: