ரத்தத்தில் 'வைட்டமின் - டி' சத்து அதிகமிருந்தால் ஆயுள் கெட்டியாகும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிலர் நீண்டகாலம் வாழ்வதற்கும், பலரது வாழ்க்கை அற்பஆயுளில் முடிந்துபோவதற்கும் காரணம் என்ன என்பது குறித்து லண்டன் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வந்தனர்.
இதில், ரத்தத்தில் உள்ள 'வைட்டமின் - டி' சத்து நமது ஆயுளை அதிகரிப்பது தெரியவந்துள்ளது.அதன்படி, நமது ரத்தத்தில் 20 முதல் 30 நானோ மில்லி லிட்டர் அளவு 'வைட்டமின் - டி' சத்து இருந்தால், அவர்களுக்கு ஆயுசு கெட்டியாக இருக்கும்.
ஆனால், 5 முதல் 10 மில்லி லிட்டர் அளவு சத்து மட்டுமே இருப்பவர்கள் அற்ப ஆயுளில் இறந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.
'வைட்டமின் - டி' சத்துக்கள் சூரிய ஒளியிலேயே அதிகம் உள்ளன. காலை வேளையில் வெயிலில் நிற்பதன் மூலம், சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் இந்த சத்தை அதிகம் பெறலாம்.
இதுதவிர, பால், மீன் போன்ற உணவுப் பொருட்களிலும் 'வைட்டமின் - டி' அதிகளவில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதை அறியாமல் இருக்கிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Friday, July 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment