Friday, July 4, 2008

இதயநோய் வராமல் தடுக்க உதவும் பச்சை தேயிலை!

தேநீர் பருகும் பழக்கமுள்ளவர்கள், பச்சை தேயிலை (பதப்படுத்தப்படாத தேயிலை) மூலம் தயாரிக்கப்படும் தேநீரை அருந்தினால், இரட்டிப்பு பலனைப் பெறுவது உறுதி.

சுவை ஒருபுறம் இருக்கட்டும், இதய நோயகள் வராமல் காக்கும் வல்லமை, பச்சை தேயிலைக்கு உண்டு என்கின்றது கிரீக் நாட்டின் மருத்துவ ஆய்வு.

பச்சை தேயிலையில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ், இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு துணைபுரிகிறது என்று மருத்துவ ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.

இதுதொடர்பாக, ஏதென்ஸ் மெடிக்கல் ஸ்கூல் மேற்கொண்ட பரிசோதனையில், ஒரு தன்னார்வலர் குழுவுக்கு பச்சை தேயிலை மூலம் தயாரிக்கப்பட்ட தேநீர், 125 மில்லி கிராம் காஃபினுடன் 450 மில்லி லிட்டர் வெந்நீர் ஆகியவை வெவ்வேறு தருணங்களில் கொடுக்கப்பட்டது.

இதில், பச்சை தேயிலை மூலம் தயாரிக்கப்பட்ட தேநீரைப் பருகியோரின் இதயத் தமனி சிறப்பாக செயல்படுவது தெரியவந்தது.

இந்த வகை தேநீரை, தினமும் ஒரு கப் அளவில் பருகுவது நன்மை பயக்கும் என்று இந்த ஆய்வு தெரிக்கிறது.

இந்த ஆய்வு தொடர்பான முழு விபரமும், 'ஈரோப்பியன் ஜர்னல் ஆஃப் கார்டியோவாஸ்குலர் பிரிவென்ஷன் அண்ட் ரிஹேபிலிடேஷன்' இதழில் வெளியாகியுள்ளது.

0 comments: