Tuesday, July 15, 2008

அழகு, மனம், ஆரோக்கியம்

உடம்பு மிகவும் சூடாகி விட்டால் உடம்பைக் குளிரச் செய்யும் ஒரு இயற்கையான விஷயம்தான் வியர்வை. ஒரு ஆரோக்கியமான உடம்பிற்கு இதுவே அறிகுறி.

எப்பொழுதுமே ஏ.சி. அறையில் உள்ளவர்கள் காலையில் எழுந்து வியர்க்கும் வரை உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது _ அவசியமும் கூட. எவ்வளவு வியர்வை வெளியேறுகிறதோ அந்த அளவிற்கு இணையாக தண்ணீர் பருகுவது அவசியம்.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அளவில் வியர்வையானது ஏற்படும்.

வியர்வையும் துர்நாற்றமும் உடன்பிறந்தவை. நம் உடல் அதிகப்படியாக வியர்க்கும் போதுதான் துர்நாற்றம் ஏற்படுகிறது. யோகா-வியர்வையால் ஏற்படும் உபாதைகளிலிருந்து விடுபட சிறந்த நிவாரணி.

வெளியிடங்களுக்கு செல்லும் நாம் நமக்கு ஏற்ற உடைகளை அணிவதுபோல் நமக்கு ஏற்ற செண்ட் (Body Spray அல்லது Perfume) போட்டுக் கொள்வது நல்லது.

அதிக வியர்வை வரும் உடம்பாக இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளியுங்கள். நல்ல பருத்தி ஆடைகளை மட்டும் அணியுங்கள். சின்தடிக் (Synthetic) ஆடைகள் வேண்டாம். அதேபோல மிகவும் இறுக்கமான உடைகளையும் தவிர்க்கலாம்.

இதமான வாசனை சென்ட்டை உபயோகியுங்கள். எப்பொழுதும் ஒரு சின்ன பர்ஃப்யூம் பாட்டிலை உங்கள் பையில் வைத்திருங்கள். தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம்.

நீங்கள் எந்த நேரமும் புத்துணர்ச்சியுடன் இருக்க இது உதவும்.

கூலிங் கிளாஸ் வாங்கும் பொழுது அதில் UVA and UVB பாதுகாப்பு உள்ளதா என்று பாருங்கள். இவைகள்தான் சூரிய ஒளியிலிருந்து வரும் Ultraviolet ‡ கதிர்களிடமிருந்து நம் கண்களைப் பாதுகாக்கும்.

நீங்கள் வாங்கும் கூலிங்கிளாசின் ஃப்ரேம் மிகவும் முக்கியமான ஒன்று. அதிக எடையில்லாத லேசான மற்றும் உங்கள் முகத்திற்கு சரியாக பொருந்தும் வகையிலும் தேர்ந்தெடுங்கள்.

கூலிங்கிளாசில் உள்ள லென்ஸ் அல்லது கண்ணாடியின் நிறத்திற்கும் சில தன்மைகள் உண்டு. பெரும்பாலான கூலிங்கிளாசுகள் GREY நிறத்தில் வருவதற்குக் காரணம் உண்டு. GREY வெளிச்சத்தைக் குறைத்து மிதமான அளவிலேயே கண்களுக்கு வெளிச்சம் தரும்.

BROWN மற்றும் பச்சை நிற கூலிங்கிளாஸ் வெளிச்சத்தைக் குறைத்து தெளிவாகப் பார்க்க உதவும் (WITH CLARITY). மஞ்சள் மற்றும் ஆரஞ்சு_

சிவப்பு நிற கூலிங்கிளாஸ் பார்க்கும் பொருட்களில் நிறங்களை சிறிது மாற்றும் எந்த நிற எந்த ஃப்ரேம் frame உள்ள கூலிங்கிளாஸாக இருந்தாலும் அது உங்களுக்கு பொருத்தமாக சரிய இருந்தால் அணியலாம்.

கண்கள் மிகவும் மென்மையான முக்கியமான ஒன்று. அதனால் நல்ல தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் கூலிங்கிளாசுகளை உபயோகிப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு தயவு செய்து கடற்கரை மற்றும் தெருவோரங்களில் விற்கும் கூலிங்கிளாசுகளை வாங்கித் தராதீர்கள். கண்களுக்கு இவைகள் கெடுதலை உண்டுபண்ணும்.

சில வேடிக்கையான உண்மைகள்

1. செல்போன் அல்லது walkman head Phones யை வெறும் ஒரு மணி நேரம் போடுவதால் உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை எழுநூறு (700) மடங்கு பெருக்கிவிடுகிறீர்கள்!

2. நீங்கள் உறங்கும்போது இயல்பாக எரிக்கும் கலோரிகளை விட (Calories) TV பார்க்கும்போது எரிப்பது மிகவும் குறைவு!

3. ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 80-100 முடிகளை இழப்பது யதார்த்தம்!

4. ஆரம்ப காலத்தில் CocaCola வின் நிறம் பச்சை.

5. சராசரியாக ஒரு பெண்மணி அவளுடைய வாழ்க்கையில் 20’Kg lipstickயை உபயோகிக்கிறாள்.

6. ஒரு குட்டி யானை ஒரு நாளைக்கு 80 litre வரை பால் குடிக்கும்!

7. Chewing gum மென்றபடி வெங்காயம் நறுக்கினால் கண்களில் நீர் வடியாது. (இதை நானும் செய்துதான் பார்க்க வேண்டும்)!

0 comments: