தேவையானவை:
முளைகட்டிய பயறு - 2 மேஜைக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
புளிக்காத கெட்டித் தயிர் - அரை கப்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு -1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை - கொஞ்சம்
செய்முறை
முளைகட்டிய பயறுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து தயிர் உப்பு சேர்த்துக் கலந்து கொத்துமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் ஒன்று, இரண்டு நிமிடங்கள் வேக வைத்து உபயோகப்படுத்தவும். இது சாம்பார், வற்றல் குழம்பு, பரோட்டா, அடை, புலாவ் இவற்றுக்கு நல்ல காம்பினேஷன்.
0 comments:
Post a Comment