Sunday, July 20, 2008

கர்நாடகா கீரை மசியல்

தேவையானப் பொருட்கள்
பசலைக்கீரை =1கட்டு
து. பருப்பு =100கி
ம.தூள் =1/2ஸ்பூன்
பெருங்காயம் =1/2ஸ்பூன்
ப.மிளககய் =4
சீரகம் =1/2ஸ்பூன்
கொப்பரைத்தேங்காய் =2சில்
தனியா =1ஸ்பூன்
உப்பு =தேவையானது
எண்ணை =2ஸ்பூன்
கடுகு, உளுந்து =1ஸ்பூன்
கடலைப்பருப்பு =1ஸ்பூன்
வரமிளகாய் =2
புளி =நெல்லிக்காயளவு

செய்முறை
தனியா, ப.மிளகாய், சீரகம் , கொப்பரைத்தேங்காய் ஆகியவற்றை தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
கீரையை பருப்புடன் குக்கரில் 2விசில்வைத்து வேகவிடவும். ஒரு கடாயில் எண்ணை விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு,காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தாளித்து அடுப்பை அணைக்கவும். புளியை கரைத்து விட்டு, உப்பு போடவும். அரைத்த மசாலாவை சேர்த்து அடுப்பில் வைத்து வெந்த கீரையை சேர்த்து ம.பொடி, பெருங்காயம் போட்டு கொதித்தவுடன் இரக்கவும்

0 comments: