Monday, July 14, 2008

பிரெட் போண்டா

சாதாரணமாக நாம் செய்யும் போண்டா போல இருந்தாலும், ரொம்ப மெதுவா இருக்கும். சுவையும் வித்தியாசப்படும்.
தேவையானப் பொருட்கள்
கடலை மாவு - 2 கை,
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி,
பிரெட் - 3 ஸ்லைஸ்,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 2,
கறிவேப்பிலை - 10,
கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது),
புதினா - 2 கைப்பிடி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.

செய்முறை
வெங்காயம், புதினா, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்து பிழிந்து, உதிர்த்துக் கொள்ளவும்.
கடலை மாவு, அரிசி மாவு, உதிர்த்த பிரெட், வெங்காயம், மிளகாய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா,சிறிது தண்ணீர் எல்லாம் சேர்த்து தளர பிசைந்து கொள்ளவும்.
எண்ணெய் காய வைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு, பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:
மாலை நேரத்தில், சாப்பிட சுவையான சிற்றுண்டி. ஒருமுறை செய்தால் திரும்ப, திரும்ப செய்யத் தூண்டும் இதன் ருசி.
வழங்கியவர்

0 comments: