Monday, July 7, 2008

ராகி களி

தேவையான பொருட்கள்
ராகிமாவு -100 கிராம்,

நொய் (பாதி அரிசி) - 50 கிராம்,

உப்பு - தேவைக்கேற்ப,

வெங்காயம் -1,

பச்சை மிளகாய் -1,

தண்ணீர் -50 மில்லி,

எண்ணெய் -2 டீஸ்பூன்.


செய்முறை

ராகிமாவை தண்ணீரில் கரைத்து உப்பு போட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். நொய்யை ப்ரஷர் குக்கரில் வைத்து இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக வேக்காடு போடவும்.


அதை அப்படியே கரைத்து வைத்த மாவுடன் ஊற்றி ஊற்றி `திக்' ஆகும் வரை கிளறவும். ம்... ராகி களி மணக்க... மணக்க... ரெடியாகிவிடும்.


அப்படியே வெங்காயம், பச்சைமிளகாயைத் தொட்டுக் கொண்டு சுவையாய் சாப்பிடலாம்.


வெங்காயம், பச்சை மிளகாயைத் தவிர்த்துவிட்டு பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரையைக் கலந்தால் அட... அட... அல்வா போல் இருக்கும். குழந்தைகளுக்கும் கொடுத்துப் பாருங்கள்.

0 comments: