Monday, July 7, 2008

ராகி தோசை

தேவையான பொருட்கள்

ராகிமாவு -100 கிராம்,

அரிசி மாவு -25 கிராம்,

வெங்காயம் -2,

பச்ச மிளகாய் -2,

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,

எண்ணெய் -4 டீஸ்பூன்,

கறிவேப்பிலை -தேவைக்கேற்ப.


செய்முறை


ராகி மற்றும் அரிசி மாவில் உப்பு சேர்த்து, பிறகு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்துக்குக் கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு டீஸ்பூன் எண்ணெயையும் உளுத்தம் பருப்பையும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து கடாயில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.


பிறகு அதில் கறிவேப்பிலையைத் தூவி கலந்து வைத்த மாவுடன் கலந்துவிட்டு அதை அப்படியே தோசையாக வார்த்தால் ராகி தோசை சுடச்... சுட... ரெடி.


அதுவே வெங்காயம், பச்சை மிளகாயை தவிர்த்து 200 கிராம் வெல்லம் கலந்து ராகி தோசை செய்தால் உங்கள் வீட்டு குட்டீஸ் விரும்பிச் சாப்பிடுவாங்க.

0 comments: