Thursday, July 17, 2008

உயிர் சப்தம்!

எதிர் வீட்டு
மாடியின் திறந்த வெளியில்
சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
மாடியில் அமர்ந்து
அஸ்தமன சூரியனைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
சூரியனுக்குக் கீழே
சிப்பாய்களும் யானையும் குதிரையும்
வெட்டுப்பட்டு கீழே விழுகின்றார்கள்.
கீழே விழும் பேரோலம்
காதருகே கேட்கிற அந்த நிமிடம்
உயிர் நின்று திரும்புகிறது.
பிறகு
எப்போதும் போல
சூரியனுக்குக் கீழே
சோடியம் விளக்குகள் எரியத் தொடங்குகின்றன

0 comments: