Wednesday, July 16, 2008

ஜிம்மி

நாலுநாளாநம்ம ஜிம்மிஅழுதுக்கிட்டே இருக்குது. ஞாயிற்றுக்கிழமை டாக்டர் கொண்டுபோய் காட்டுவோம்.'' மனைவி அனிதாவிடம் வருத்தமாய் சொன்னான் ராஜா.

``அட நீங்க வேறே. நாய் இதுமாதிரி அழுதுச்சுன்னா வீட்லே யாரோ சாகப்போறாங்கன்னு அர்த்தம். எமன் வர்றது நாய் கண்ணுக்குத் தெரியுமாம்.'' இரவு தூங்கப்போகும் சமயத்தில் ராஜாவின் மனதில் பீதியைக் கிளப்பினாள் அனிதா.

``என்ன சொல்றே?'' அச்சத்துடன் கேட்டான்.

``ஆமாங்க. உங்க அப்பா வேறே வயசானவரா இருக்காரு. ஒருவேளை...'' இழுத்தாள்.

``வயசானாலும் நல்லாதானே இருக்காரு.''

``நீங்க வேறே அடிக்கடி நெஞ்சை வலிக்குதுங்குறீங்க. எனக்கு என்னவோ பயமா இருக்குது.''

``எனக்கு அல்சர் இருக்கிறதாலே அப்படி நெஞ்சை வலிக்குது.''

``நம்ம ராகேஷ் வேறே பைக்லே காலேஜ் போறான். வேகமா ஓட்டுறதா வேறே சொல்றாங்க. அவனை ஜாக்கிரதையா ஓட்டச் சொல்லணும். எனக்கென்னவோ மனசே சரியில்லேங்க. திக் திக்குன்னு இருக்குங்க.'' கலக்கமாய்ச் சொன்னாள் அனிதா.

மறுநாள் விடியற்காலை.

``என்னங்க... இங்கே வாங்களேன்'' அனிதா அலறினாள்.

அலறல் சத்தம் கேட்டு எல்லோரும் எழுந்து ஓடிவர...

அங்கே... ஜிம்மி இறந்தது கிடந்தது..

0 comments: