Wednesday, July 16, 2008

சுட்டி

ஞாயிற்றுக்கிழமை.

`ப்ரியா, சௌம்யா... சீக்கிரம் எல்லாம் ஒழுங்கு பண்ணுங்க! வீடு மாதிரியா வைச்சிருக்கீங்க...?'' மகள்களிடம் சொல்லிவிட்டு மனைவியிடம் திரும்பினார் சபேசன்.

``லதா...! நீ இந்த விளையாட்டுச் சாமானையெல்லாம், பைல போட்டு கட்டிலுக்கடியில் தள்ளு...! எம்.டி. வந்து பாக்கறச்சே, படு நீட்டா இருக்கணும்.''

அந்தப்பக்கம் வேறு வேலையாக வருவதாக இருந்த, சபேசனின் எம்.டி, அவர் வீட்டிற்கு வருவதாய் கூறியிருந்ததில், அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது, வீடு!

மனைவியுடனும், நான்கு வயது மகனுடனும் வந்து இறங்கினார், எம்.டி.கோபாலன். மகன் முகத்திலேயே வால்தனம் வழிந்தது.

அவன் பில்டிங் செட்டை எடுத்த விநாடி அட்டை டப்பா சரிய, அத்தனையும் கீழே விழுந்தன. தரையெங்கும் பொம்மைகள் சிதறிக் கிடந்தன.

எம்.டி. சாப்பிட்டு எழுவதற்குள், `டொம்'மென்ற சத்தம். எந்த பொம்மையோ, இரண்டாகியிருந்தது.

``இவன் இப்படித்தான். ஒரு நிமிஷம் சும்மா இருக்கமாட்டான்'' _ கோபாலனிடம் அசடு வழிந்து, சிரித்து வைத்தார் சபேசன்.

அவர்கள் போனதும், ``அய்யோ...! திரும்ப க்ளீன் பண்ணணுமா..?'' தலையில் கை வைத்தவாறே, அபிநயத்துடன் மலைத்த மகள்களைக் கண்டதும், `சுருக்'கென்றது சபேசனுக்கு!

0 comments: