Friday, July 11, 2008

டாங்கி மேக்ரோனி

தேவையன பொருள்கள்:

மேக்ரோனி - 1 கப்,
தக்காளி விழுது - 2 கப்,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
ஃபிரஷ் க்ரீம் - 3 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

மேக்ரோனியை மூன்று கப் தண்ணீரில் லு டீஸ்பூன் எண்ணெய், உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். மேக்ரோனி முக்கால் பகுதி வெந்தவுடன் நீரை வடிகட்டவும்.

(மேக்ரோனி வேக வைக்கும் முறை :

வெந்த ஒரு மேக்ரோனியை எடுத்துப் பாதியாக வெட்டினால் அதன் உள்ளே ஒரு சிறிய வெள்ளைக் கோடு தெரியும். அதுதான் பதம்.) மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி அதில் தக்காளி விழுது, வெந்த மேக்ரோனி, மிளகாய்த்தூள், பிரஷ் க்ரீம் எல்லாவற்றையும் சேர்த்து முள் கரண்டியால் நன்கு பிரட்டி மிளகாய்த்தூள் வாசனை போனவுடன் கீழே இறக்கி பரிமாறவும்.

0 comments: