இந்த வேலைக்குத் தகுதியானவர் இல்லை' என்று டெபுடி மேனேஜர் சுந்தரம் கொடுத்த கடிதத்தோடு எதிரே வந்து நின்ற கணபதியைப் பார்த்தார் எம்.டி. சுரேஷ். கடிதத்தைப் படித்தார்.
``நீங்க... பாண்டியன்கிட்டே போய் வேலை பாருங்க...'' என்று கூறி, கணபதியை பாண்டியனிடம் அனுப்பி வைத்தார் எம்.டி.
பத்து நாட்கள் ஓடிவிட்டன. போனில் தொடர்புகொண்டார் எம்.டி.சுரேஷ்.
``கணபதி பியூன் வேலைக்குத் தகுதியானவர் இல்லை சார்... ஆனால் அலுவலகப் பராமரிப்பு நன்றாகப் பார்க்கிறார். அவரை அதற்குப் பயன்படுத்திக் கொண்டேன் சார்...'' பாண்டியன் பதிலளித்தார்.
எம்.டி. சுரேஷின் அறை... எதிரே டெபுடி மேனேஜர்களான சுந்தரமும், பாண்டியனும்.
``தனக்குக் கீழே வேலை பார்க்கிறவங்க அந்த வேலைக்கு லாயக்கு இல்லைன்னு சொல்லி அனுப்புறது மேலதிகாரியோட பணி இல்லே. ஒரே கல்வித் தகுதி, சர்வீஸ் இருந்த உங்க இரண்டு பேர்ல யாருக்கு ஜி.எம். பதவி கொடுக்கிறதுன்னு ஒரு சந்தேகம். அதுக்கான டெஸ்ட்தான் இது. பாண்டியன் ப்ளஸ் மார்க் வாங்கிவிட்டார். அடுத்த ஜி.எம். பாண்டியன்... ஸாரி மிஸ்டர் சுந்தரம்...'' என்றார் எம்.டி.சுரேஷ்..
Saturday, July 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment