தேவையானப் பொருட்கள்
பச்சரிசி - 2 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்
சாதம் - 3 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
உழுந்து - 1 ஸ்பூன்
ஜீரகம் - 1/2 ஸ்பூன்
செய்முறை
அரிசியை 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
பின் மற்ற பொருட்களை சேர்த்து மிக்சியிலோ க்ரைன்டரிலோ இட்டு நன்கு மை போல் அரைக்கவும்.
தோசை மாவை விட சற்று தளர்த்தியாக வேண்டும் மாவு.
அதிகம் புளிக்க விடாமல் ஒரு 10 மணிநேரம் வைத்து சுட்டால் போதும்
அப்பம் கடாயை காயவைத்து அதில் எண்ணை லேசாக தடவவும் அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி சுற்றி பாத்திரத்தின் எல்லா ஓரங்களிலும் மாவு சுற்றி மூடியிட்டு வேக விடவும் மறுபுறம் திருப்பக் கூடாது. சூடாக பரிமாறவும்.
மொத்தமாக மொருமொருப்பு வேன்டுபவர்கள் 1/2 கரண்டி மாவை ஊற்றி சுற்றவும் அப்பொழுது நடுவில் மாவு கட்டியாக நிற்காமல் மொருமொருப்பாய் வரும்.
குறிப்பு:
ஜீரகமும் தேங்காயும் சேர்ப்பதால் சுவையாக இருக்கும்..பாயா,ஸ்டியூ,குருமா,மீன் குழம்பு,தேங்காய் பால்,தேங்காய் சட்னி முதலியவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்
0 comments:
Post a Comment