Friday, July 11, 2008

முட்டையில்லாத கேக்

தேவையானப் பொருட்கள்
மில்க் மெய்ட்-1 டின்,
வெண்ணெய்-120 கிராம்,
மைதா-240 கிராம்,
பேக்கிங் பவுடர்-1 டீஸ்பூன்,
சமையல் சோடா-2 டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ்-1 டீஸ்பூன்,
கோ கோ-கோலா அல்லது ஏதாவது ஒரு குளிர்பானம்-200 மி.லி, மரக்கரண்டி

செய்முறை:

அகலமான எவர் சில்வர் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் மில்க்மெய்டையும், வெண்ணெயையும் போட்டு மரக்கரண்டியால் நன்றாக கலக்கவும்.

மைதாவில் பேக்கிங் பவுடர், சமையல் சோடாவைச் சேர்த்துக் கலந்து கொண்டு நன்றாகச் சலிக்கவும்.

பிறகு மைதாவுடன் ஏதாவது ஒரு குளிர் பானத்தைச் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து, வெனிலா எசென்ஸ் சேர்த்து தனியாகக் கலக்கி வைக்கவும். இதை அடித்து வைத்துள்ள மில்க்மெய்ட், வெண்ணெய் கலவையுடன் சேர்க்கவும்.
பின்னர் அலுமினிய ட்ரேயில் வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பரைக் கட் செய்து போட்டு, கலந்து வைத்த மிக்ஸைக் கொட்டிப் பரத்தவும், அதை 160 சென்டிகிரேடில் 20 நிமிடங்கள் ஓ.டி.ஜி அவனில் பேக் செய்யவும்.

0 comments: