Friday, July 11, 2008

பட்டர் டீ கேக்

தேவையான பொருட்கள்:


வெண்ணெய்-200 கிராம்,
சர்க்கரை-200 கிராம்,
மைதா-200 கிராம்,
முட்டை-4,
பேக்கிங் பவுடர்-1 டீஸ்பூன்,
எசென்ஸ்-1 டீஸ்பூன்

செய்முறை:

சர்க்கரையை பொடி செய்து வெண்ணெயுடன் 10 நிமிடங்கள் நன்றாக கலக்கவும். அத்துடன் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி அடித்து கலக்கவும்.

மைதாவில் பேக்கிங் பவுடரை கலந்து சலித்துக் கொள்ளவும். பின்னர் முட்டைக் கலவையுடன் இதைக் கட்டியில்லாமல் கலந்து, கடைசியாக எசன்ஸ் சேர்க்கவும்.

கேக் ட்ரேயில் வெண்ணெய் தடவி, பட்டர் ஷீட் போட்டு அதில் கலந்து வைத்துள்ள மிக்ஸைக் கொட்டிப் பரத்தி 200 டிகிரி சென்டி கிரேடில் சுமார் 20 நிமிடங்கள் பேக் செய்ய பட்டர் டீ கேக் ரெடி!

0 comments: