தேவையான பொருட்கள் :
பச்சைப் பட்டாணி - 1 கப்,
நறுக்கிய பனீர் -1 1/2 கப்,
தக்காளிச் சாறு - 3 கப்,
வெங்காயம் பொடியாக நறுக்கியது -1/2 கப்,
இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் - தலா 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சிவப்பு மிளகாய்த்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
மைக்ரோவேவ் அவனில் பட்டாணியை அரை கப் தண்ணீருடன் உப்பு சேர்த்து 3 நிமிடம் ஹையில் வேக வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி அவனில் 30 விநாடிகள் ஹையில் வைக்கவும். பிறகு அதை வெளியே எடுத்து வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் ஹையில் வைக்கவும்.
பிறகு இதில் மசாலாப் பொடிகளுடன், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் கலக்கி ஒரு நிமிடம் ஹையில் வைக்கவும். இந்தக் கலவையுடன் பச்சைப் பட்டாணி மற்றும் பனீர் சேர்த்து ஒரு நிமிடமும், தக்காளிச் சாறு சேர்த்து 3 நிமிடமும் ஹையில் வைத்து கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி இறக்கவும்.
Friday, July 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment