Friday, July 11, 2008

அவியல்

தேவையான பொருட்கள் :

நீளவாட்டில் நறுக்கிய காய்கறிகள் (கலவையாக) - 5 கப்,
தேங்காய்த் துருவல் -2 கப்,
சீரகம் - 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் (அ) வர மிளகாய்,
உப்பு - தேவையான அளவு,
தயிர் - 1 கப்,
மல்லி, கருவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை :

காய்கறிகளுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அவனில் 5 நிமிடங்கள் ஹையில் வைத்தால் காய்கறிகள் வதங்கி இருக்கும். நிறம் மாறாது. தேங்காய், சீரகம், மிளகாயைப் பேஸ்ட்டாக அரைக்கவும். காய்களுடன் இந்த பேஸ்ட்டைச் சேர்த்து முள் கரண்டியால் உடையாமல் கிளறி இதை மறுபடியும் ஒரு நிமிடம் ஹையில் வைக்கவும்.

தயிரைக் கட்டி இல்லாமல் கடைந்து அதை வெந்து தயாராகவுள்ள அவியலுடன் கலந்து மீண்டும் ஒரு நிமிடம் ஹையில் வைத்து கீழே இறக்கி மல்லி, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும். இந்த அவியலுக்கு எண்ணையே தேவையில்லை.

0 comments: