Wednesday, July 23, 2008

சீராளம் கறி


தேவையான பொருட்கள்

பாசிப் பயறு-200 கிராம்,
வெங்காயம்,
பச்சை மிளகாய்,
இஞ்சி
பூண்டு
உப்பு - தேவையான அளவு
ஏலக்காய் - 2
லவங்கம் - 2
பட்டை இலை - 1
மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் பாசிப் பயரை வெறும் வாணலியில் வறுத்து எடுத்து, தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடி பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டை தட்டி வைத்துக் கொண்டு ஊற வைத்த பாசிப் பயரை மிக்ஸியில் சிறிது அளவு உப்பு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை கலந்து இட்லி தட்டில் வைத்து வேக வைக்கணும். வேக வைத்த இந்த பாசிப் பயறு கலவையை எடுத்து, கத்தியால் க்யூப்ஸ் ஆக `கட்' செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு இரண்டு ஏலக்காய், லவங்கம், பட்டை இலை போட்டு பொரித்து, அதில் பொடிப் பொடியாக அரிந்து வைத்த வெங்காயத்தைப் போட்டு வதக்கி, `கட்' செய்த பாசி பயறு க்யூப்ஸ்-ஐ போட்டு, உப்பு, மஞ்சள் பொடி மற்றும் 2 ஸ்பூன் மிளகாய்ப் பொடிபோட்டு ட்ரை பண்ணணும். குளிர்ச்சி தரும் பாசிப் பயரை எந்தவிதமாக வேண்டுமானாலும் தயார் பண்ணிச் சாப்பிடலாம். இந்த சீராளம் கறியை எதை வைத்து தயார் செய்தீர்கள் என்று சாப்பிடுபவர்களுக்கு ஒரு சின்ன போட்டியும் வைத்து அவர்கள் மூளையை கசக்க வைக்கலாம்.

0 comments: