Wednesday, July 16, 2008

கண்ணாளனே!

காலை 9 மணி. ராஜன், ஜமுனா தம்பதிகளின் வீடு.

``அறிவிருக்காடி உனக்கு...? பட்டுப்

புடவைக்கே, 5000 ரூபாய் செலவு

பண்ணிருக்கியே..!'' மனைவியிடம் ராஜன்

கத்தினார்.

``இனிமே, பண்ணலைங்க. ப்ளீஸ்... மன்னிச்சிடுங்க..''

``ஆமாம்பா. நானும், இனிமே சாரி, சூரிதார்லாம் கேட்கமாட்டேன்..'' மகள்

நித்யாவும் சொன்னாள்.

நித்யா வெளியில் போனதும், புருஷனை ஜமுனா கேட்டாள்.

``ஏங்க... இது என்ன புதுக் கூத்து...? புடவையை வாங்கச் சொன்னதே, நீங்கதான்.

இப்ப, ஆ... ஊங்கறீங்க..''

``அடியே, நித்யா காலேஜ்ல ஃபைனல் இயர் படிக்கறா, கஷ்டமில்லாம வளர்ந்தவ..!

பொதுவா, வசதியான வீட்டுப் பொண்ணுங்கதான், காதல், கத்தரிக்கான்னு

மாட்டிக்கும்ங்க!

அதான், கஷ்டத்துல திண்டாடறோம்கற மாதிரி பேசினேன். இனிமே, பொறுப்பா இருப்பா'' ராஜன் சிரித்தபடி சொன்னார்.

``நல்ல காரியம்தான் செஞ்சிருக்கீங்க...''

மாலை ஆறு மணி.

``அங்கிள்.. இந்த ஹேண்ட் பேகை, நித்யா தரச் சொன்னா..'' நித்யாவின் ப்ரெண்ட் தந்துவிட்டுப் போனாள்.

பேக்கினுள், ஒரு கடிதமிருந்தது. நித்யாவின் கையெழுத்துதான், ராஜன் படித்தார்.

``அன்பு அப்பாக்கு,

நான், ஒருவரைக் காதலிக்கிறேன். அவர், ஒரு பைசா செலவில்லாமல் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறார். நானும், சம்மதித்துவிட்டேன். உங்களுக்கும் எந்தச் செலவும் இல்லாமல் பார்த்துக் கொண்டுவிட்டேன். என்னை ஆசிர்வதியுங்கள்..!''

என்றிருந்தது..

0 comments: