Wednesday, July 16, 2008

வெங்காய கொத்து மல்லி தோசை

தேவையானப் பொருட்கள்
தோசை மாவு - இரண்டு கப்
வெங்காயம் - முன்று
கொத்து மல்லி தழை - அரை கட்டு
பச்ச மிளகாய் இரண்டு
மாவு கலக்க------------
உப்பு - தேவைக்கு
இட்லி சோடா - - ஒரு பின்ச்
நல்லெண்ணை - ஒரு தேக்கரன்டி
சர்க்கரை - அரை தேக்கரன்டி

செய்முறை

தோசை மாவில் கலக்க வேண்டியவைகளை போட்டு தோசை ஊற்றும் பதத்திற்கு கலக்கி, அதில்,வெங்காயம்,பச்சமிளகாயை பொடியாக அரிந்து போட்டு, கொத்துமல்லி தழையை ஆய்ந்து பொடியாக அரிந்து விட்டு மண்னில்லா ஒரு புளி வடிகட்டியில் வைத்து நல்ல உலசி மாவில் கலக்கவும்.
பத்து நிமிடம் கழித்து சுட்டு சாப்பிடவும்.
சுவையான தோசை வெங்காய கொத்து மல்லி தோசை ரெடி.

0 comments: