தட்சிணாமூர்த்தியின் 50ஆவது பிறந்தநாள் விழாவையும் 25ஆவது திருமணநாள் விழாவையும் ஒன்றுசேர்த்து அவரது அலுவலக நண்பர்கள் விமரிசையாகக் கொண்டாடினர்.
பத்திரிகை நிருபர்கள் சிலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
விழாவின்போது ஒரு நிருபர் தட்சிணாமூர்த்தியை அணுகினார்.
``இவ்வளவு நீண்ட காலம் வெற்றிகரமாகத் திருமண வாழ்க்கையை நடத்திய ரகசியத்தைச் சொல்ல முடியுமா சார்?''
``திருமணம் முடிந்ததும் தேன்நிலவின்போது நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிதான் காரணம்'' என்ற தட்சிணாமூர்த்தி புன்னகையுடன் தொடர்ந்தார்.
``தனித்தனிக் குதிரைகள்லே ஏறி, ரெண்டு பேரும் குதிரைச் சவாரி செய்தோம், என்னோட குதிரை சமர்த்தா ஓடிட்டிருந்தாலும், அவ குதிரை அவளைக் கீழே தள்ளிட்டது. எழுந்தவ குதிரையை முதுகிலே தட்டிக்கொடுத்து, `இது உனக்கு முதல் தடவை'ன்னு சொல்லிட்டு ஏறிக்கிட்டா.
திரும்பவும் அவளைத் தள்ளிவிட்டிடுத்து. இந்தத் தடவை கடுமையான கோபத்தோட எழுந்த
அவ, விருட்டுன்னு தன்னோட கைத் துப்பாக்கியை எடுத்து அதைச் சுட்டுக் கொன்னுட்டா.''
எனக்குச் சரியான கோபம். இப்படி அவசரப்பட்டுக் கொன்னுட்டியே?'ன்னு
திட்டினேன். என் தோளிலே தட்டிக்கொடுத்து, `இது உங்களுக்கு முதல் தடவை'ன்னா....''.
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment