``அம்மா...''
வேலைக்குப் போகும் பரபரப்பில் இருந்தாலும்,
கொஞ்சம் கீழ் இறங்கி வந்தாள்.
``என்னடா கண்ணு...?''
``ஸ்கெட்ச் பென் பாக்ஸ் கேட்டுருந்தேன்ல...''
``என்னங்க! நீங்களாவது மறந்திடாம, அவன் கேட்கிற ஸ்கெட்ச் பென் இன்னிக்கு வாங்கிட்டு வந்திடுங்க.''
``அப்புறம், ஒரு ஸ்கேல்மா''
``சரிப்பா, இதையும் சேர்த்து அப்பா வாங்கிட்டு வந்திடுவாரு. என்ன...'' விறுவிறுவென கிளம்ப
எத்தனிக்கையில் ``அம்மா, பேனாவும் உடைஞ்சிட்டுமா..''
``சரிப்பா, அப்பாவே மறந்தாலும் நீ சொன்ன எல்லாத்தையும் நானே வாங்கிட்டு வந்திடுறேன்''
``அய்யயோ.. வேணாம்மா எதையும் வாங்கிட்டு
வந்திடாதே...?'
``ஏன்ப்பா..?'' இருவரும் திகைப்புடன் கேட்டனர்.
``ஏதோ இப்படி எல்லாம் கேட்கிறதாலதான், இப்ப கொஞ்ச நேரமாவது பேசிக்கிட்டு இருக்கீங்க. இப்படி கிடைக்கிற கொஞ்ச சந்தோசத்தையும் வாங்கிக்கொடுத்து கெடுத்திடாதீங்கம்மா..''
இருவரும் விதிர்விதிர்த்துப்போய் தம் மகனை கட்டிக்கொண்டார்கள்..
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment